அரசுப்பள்ளியில் 2 மாணவர்கள் தற்கொலை... போலீசார் விசாரணை!

 
தூக்கு
 

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் வாடா தாலுகா பகுதியில் உள்ள அரசு உண்டு உறைவிட பள்ளியில் இரு மாணவர்கள் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ்

பள்ளியில் படித்து வந்த 10-ம் வகுப்பு மாணவன் தேவிதாஸ் நவலே (15) மற்றும் 9-ம் வகுப்பு மாணவன் மனோஜ் வாட் (14) மரத்தில் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர். சம்பவம் கடந்த அதிகாலை நேரத்தில் நிகழ்ந்தது.

பள்ளி ஊழியர்கள் உடனடியாக மாணவர்களை தேடியபோது, மரத்தில் தொங்கிய நிலையில் இருந்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ்

போலீசாரின் ஆரம்ப விசாரணையில், மாணவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தின் பின்னணி மற்றும் காரணங்களைத் தெரிந்து கொள்ள தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?