+2 மாணவனின் இருசக்கர வாகனம் மோதி தலைமை ஆசிரியர் பலி!

 
தலைமையாசிரியர்

பிளஸ்2 மாணவன் தனது மோட்டார் சைக்கிளை அதிக வேகத்தில் ஓட்டி வந்த போது ஏற்பட்ட விபத்தில் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பரிதாபமாக உயிரிந்த சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாபநாசம் அருகே தேவன்குடியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சிவப்பிரகாசம். 55 வயதான இவர் சிவப்பிரகாசம் நகர் பகுதியில் வசித்து வந்தார்.

தனது ஓட்டுனர் உரிமம் காலாவதியானதைத் தொடர்ந்து அதனை புதுப்பிக்க வேண்டி நேற்று காலை தனது சகோதரர் குணசேகரனுடன் பட்டீஸ்வரத்தை அடுத்த தென்னூரில் இயங்கி வரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

க்ரைம்

அப்போது வேகமாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தலைமை ஆசிரிர் ராஜூ மீது பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது பிளஸ்2 படிக்கும் 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. 

அரசியலமைப்பு சட்டத்தில் 18 வயதுக்குட்டப்பட்ட சிறுவர்களுக்கு உரிமம் இல்லாத பட்சத்தில் அவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் இருப்பதால், கோர்ட்டு சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாபநாசம்

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் இல்லாத நிலையில் அவர்களது பெற்றோர்கள் எப்படி மோட்டார் சைக்கிளை பயன்படுத்த அனுமதித்து வருவதால் இதுபோன்ற விபத்துகள் நிகழ்ந்து விடுகின்றன. எனவே பெற்றோர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னதாக, 18 வயது நிரம்பாதவர்கள் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தினால், பெற்றோர்கள் தண்டனைக்குரியவர்கள் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web