48 மணி நேரமாக உரிமையாளரை காப்பாற்ற போராடிய நாய்.. இமாச்சல பிரதேசத்தில் ஒரு பாசப்போராட்டம்..!
இமாச்சலப் பிரதேசத்தின் பிர் பில்லிங்கில் ஒரு பெண் மற்றும் ஆண் பயணம் செய்னர். மலை ஏறும் போது ஏற்பட்ட விபத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இரண்டு நாட்களாக, ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் அவர்களுடன் உடல்களுக்கு அருகில் இருந்தது. அவர்கள் காணாமல் போன கிட்டத்தட்ட 48 மணி நேரத்திற்குப் பிறகு செவ்வாய்கிழமை கண்டுபிடிக்கப்படும் வரை அந்த நாய் குரைத்துக்கொண்டே இருந்தது.
அதாவது அபிநந்தனும் பர்னிதாவும் மலை ஏறும் போது பள்ளத்தாக்கில் விழுந்ததாக அறியப்படுகிறது. எனவே 48 மணி நேரமாக அவர்களின் வளர்ப்பு நாய் அதன் உரிமையாளர்களை மீட்க உதவி கேட்டு குரைத்துள்ளது. அங்கு வந்த மீட்பு படையினர் இறந்த நிலையில் இருந்த இருவரது சடலத்தையும் மீட்டடனர்.
உயிரிழந்தவர்கள் பஞ்சாபின் பதான்கோட்டைச் சேர்ந்த அபிநந்தன் குப்தா (30) மற்றும் புனேவைச் சேர்ந்த பிரணிதா வாலா (26) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் கீழே விழுந்து இறந்ததாகத் தெரிகிறது, ஆனால் பிரேத பரிசோதனையில் தான் இறப்புக்கான காரணம் உறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க