பெரும் சோகம்... கல்குவாரியில் திடீர் மண் சரிவால் 2 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி பலி!

 
கல் குவாரி

 
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில்  கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த  கல்குவாரியில் வெடி வைக்க பள்ளம் தோண்டிய போது திடீர் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மண் சரிந்ததில் 2 பேர் உள்ளே சிக்கிக் கொண்டனர்.  உடனடியாக பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் 2 தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர். ஆனால் அதற்குள் அவர்கள் இருவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.  இதில்  எறையூர்  அய்யனார் ,   சேலம்  ராஜேந்திரன் இருவருமே   உயிரிழந்தனர்.

ஆம்புலன்ஸ்


இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு  பிரேத பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

போலீஸ்

மண்சரிவில் உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்கள்  குவாரியில் பணிபுரிபவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில்லை .  இது குறித்து  உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிஎஸ்பி தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டு   உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கலைந்து சென்றனர்

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web