அடுத்தடுத்து சோகம்... சிப்காட் தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி 2 தொழிலாளிகள் பலி!!

 
நசீப்கான்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது சிப்காட் தனியார் தோல் தொழிற்சாலை. இங்கு பணிபுரிந்து வருபவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த நசீப்கான். இவர்   டிரம் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்தார். அவர் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கியதில் மயங்கி சரிந்தார். உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டதில்  அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  

சிப்காட்


அதே போல்  தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த சுரேஷ் காந்தி என்ற ஊழியரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 2நாட்களில்  அடுத்தடுத்து   ஊழியர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம்


2 பேர் பலியானதற்கு   பாதுகாப்பு குறைபாடே காரணம் எனக்கூறி சக ஊழியர்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டனர்.   நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பாதுகாப்பு வசதியை மேம்படுத்த வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர்.அடுத்தடுத்து இரு தொழிலாளிகள் உயிரிழந்ததை அடுத்து சக தொழிலாளிகள் பாதுகாப்பு குறைபாடே காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர். உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் நவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி பாதுகாப்பு முறைகளை அதிகரிக்க செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் உறுதி அளித்ததை அடுத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். இந்த முற்றுகை போராட்டத்தால் தொழிற்சாலையில் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web