உஷார்.. காவல் நிலையம் முன்பு ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்த 2 வாலிபர்கள் கைது!

 
ரீல்ஸ்
 

 

சென்னையில் காவல் நிலையம் முன்பு ‘ரீல்ஸ்’ வீடியோ பதிவு எடுத்த 2 வாலிபர்களைப் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை கே.கே. நகர் பி.டி.ராஜன் சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்தும், கே.கே.நகர் காவல் நிலையம் முன்பும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, ஆபாசமான வார்த்தைகளுடன் ‘ரீல்ஸ்' வீடியோ எடுத்து 2 வாலிபர்கள் ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தனர்.

இன்ஸ்டா

அந்த வழியே சென்ற ஆட்டோ ஓட்டுநர் பாபிஜோஸ் என்பவர், மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட போது, இருவரும் சேர்ந்து அவரை மிரட்டி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாபிஜோஸ் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

ரீல்ஸ்

இது குறித்த புகாரின்  பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் கே.கே.நகரை சேர்ந்த ஆகாஷ் (21), கோகுல் (22) ஆகிய 2 இளைஞர்களையும் போலீசார் கைது செய்து, சாகசம் செய்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும், ரீல்ஸ் வீடியோ எடுக்கப் பயன்படுத்திய அவர்கள் இருவரின் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?