அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து 2 இளைஞர்கள் தற்கொலை!!

 
தற்கொலை

மத்திய அரசு ராணுவத்திற்கு ஆள் சேர்க்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் படி  ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்படைகளில்  4 ஆண்டுகால குறுகிய கால ராணுவ சேவை செய்வதற்கான ‘அக்னிபாத் திட்டம்’ மத்திய அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர இளைஞர்கள், பெண்கள் 18 வயது முதல் 21 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். வழக்கமான ராணுவ உடற்தகுதி நிர்ணயங்களே அக்னிபாத் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் பொருந்தும். 

அக்னிபாத்

இந்த திட்டத்தின் கீழ் பணிபுரியும் வீரர்களுக்கு முதல் ஆண்டில் ரூ.4.76 லட்சம் ஆண்டு ஊதியமும், 4வது ஆண்டில் 6.92 லட்சம் ஆண்டு ஊதியமாகவும் வழங்கப்படும். 4 ஆண்டுகளை முழுவதுமாக முடிக்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு சேவை நிதியாக தலா ரூ.11.7 லட்சம் வழங்கப்படும்.

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் முழுவதும் தீவிரமடைந்துள்ளது.

அக்னிபாத் போராட்டம் சென்னை

மேலும், போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி தாக்குதல் நடத்தியதால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் ரயில்களுக்கு தீவைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. குறிப்பாக ராணுவத்திற்குத் தயாராகி வரும் இளைஞர்களே இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனஞ்சய் மொஹாந்தி என்ற இளைஞர் 4 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் சேர்வதற்காகத் தொடர் பயிற்சியில் ஈடுபட்டுவந்தார். இந்த திட்டத்தின் மூலம் தனது ராணுவ கனவு நிராசையானதால் மனமுடைந்த தனஞ்சய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதேபோல் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த திட்டம் இளைஞர்களை தற்கொலைக்கு வழிவகை செய்யும் விதமாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web