கோல்ட்ரிஃப் இருமல் மருந்தினால் 20 குழந்தைகள் பலி... மருத்துவர்கள் போராட்டம்!

 
ஐஎம் ஏ
 


 
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்தினால் குழந்தைகள் உயிரிழப்பு 20 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட்ரிஃப்' எனும் இருமல் மருந்தால் 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெயிண்ட், மை, ரெசின், டை போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் டைஎத்திலீன் கிளைகால் எனும் நச்சுத்தன்மையுள்ள ரசாயனப் பொருள் இருமல் மருந்தில் அதிகமாக கலக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது   அது குழந்தைகளிடையே சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தியுள்ளதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருமல்

உடனடியாக தமிழ்நாடு, மத்திய பிரதேசம்  மாநிலங்களில் கோல்ட்ரிஃப்' இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு தீவிர  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மருந்தைத் தயாரித்த  ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த நிறுவனமும் மூடப்பட்டுள்ளது.   
இந்த சம்பவத்தில் குழந்தைகளுக்கு 'கோல்ட்ரிஃப்' மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் சோனி கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இவரை உடனடியாக விடுவிக்கக்கோரியும் மத்தியப் பிரதேசத்தில் மருத்துவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெற்று வருகிறது. இந்திய மருத்துவ சங்கமும் மருத்துவர் சோனியை விடுவிக்க வலியுறுத்தியுள்ளது.

இருமல் மருந்தில் விஷம்

மருத்துவர் சோனி மீதான குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை என்று இந்திய மருத்துவ சங்கத்தின் செயலாளர் டாக்டர் அங்கூர் பத்ரா  'இதில் மருத்துவர் குற்றவாளி அல்ல, அவர் அதை பரிந்துரைக்க மட்டுமே செய்துள்ளார். அந்த மருந்தை பயன்படுத்த ஒப்புதல் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?