‘மோந்தா’ புயல் ... தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
வங்கக்கடலில் கடந்த 24ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தொடர்ந்து வலுவடைந்து தற்போது புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘மோந்தா’ என பெயரிடப்பட்டுள்ளது. மணிக்கு சுமார் 16 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் மோந்தா புயல், தற்போது சென்னைக்கு கிழக்கே சுமார் 550 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் ஆந்திர மாநிலத்தின் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே, காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் ஆந்திராவை நோக்கி நகரும் நிலையிலும், தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், வடக்கு மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
