இன்று இரவு தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
மன்னார் வளைகுடா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறும் சாத்தியம் உள்ளது. இதன் விளைவாக, மாநிலத்தின் பல பகுதிகளில் மழை தீவிரமடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும். அதேபோல், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், கரூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சம் 24 டிகிரி செல்சியஸும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
