20 தேசிய விருதுகள்... பிரபல மலையாள தயாரிப்பாளர் அச்சானி ரவி காலமானார்! திரையுலகினர் இரங்கல்!

 
அச்சானி

பிரபல மலையாளத் திரைப்பட தயாரிப்பாளரும், தொழிலதிபருமான அச்சானி ரவி இன்று காலமானார். அவருக்கு வயது 90.  மலையாள திரையுலக பிரபலங்கள் அச்சானி ரவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

மலையாள திரையுலகில் தனது ஆளுமையை ஆழமாக பதித்தவர் அச்சானி ரவி. 70கலில் ஜெனரல் பிக்சர்ஸ் என்ற பெயரில் மலையாள திரைப்படங்களைத் தயாரிக்க துவங்கிய ரவிந்திரநாத் நாயர், தனது அச்சானி என்கிற படம் மூலமாக மலையாள திரையுலகினரை முழுக்கவே தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தார். வசூல் ரீதியாகவும் அச்சானி, மலையாள திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அது முதல் அச்சானி ரவி என்று ரசிகர்கள், திரையுலகினரால் அழைக்கப்பட்டு வந்தார். 

அச்சானி

தம்பு, காஞ்சனா சீதா, கும்மட்டி,எஸ்தப்பன், பொக்குவெயில், எலிப்பத்தையம், மஞ்சு என இன்றளவும் மலையாள ரசிகர்கள் கொண்டாடும் கால பொக்கிஷமாக பல திரைப்படங்களைத் தயாரித்துள்ள ரவி, தனது தயாரிப்புத் துறையில், சிறந்த படங்களுக்கான தேசிய விருதுகளை இதுவரையில் 20 முறை பெற்றுள்ளார். வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை அம்மாநில அரசு கொடுத்து கெளரவித்துள்ளது. 

அச்சானி

தனது சொந்த ஊரில் பொதுமக்களின்  பயன்பாட்டிற்காக நூலகம் ஒன்றைக் கட்டிக் கொடுத்துள்ள ரவி, சிறந்த சமூக சேவகராகவும் அறியப்பட்டிருந்தார். தரமான முந்திரிகளை ஏற்றுமதி செய்து வந்து, சிறந்த தொழிலதிபராகவும் தன்னை நிரூபித்த அச்சானி ரசி, தனது 90வது வயதில், கடந்த ஜூலை 8ம் தேதி கொல்லம் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் காலமானார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜூலை முழுவதுமே அதிர்ஷ்டம் தான்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

 

From around the web