பரபரப்பு... கஞ்சா விற்பனை... சப்-இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்ற 20 வயது இளைஞர்கள்!

 
கஞ்சா கடத்தல்
 

திருநெல்வேலி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சப்-இன்ஸ்பெக்டரை வாளால் வெட்ட முயன்ற 4 வாலிபர்களை போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, வாள் ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி திருநெல்வேலி பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் தலைமையில் பாளையங்கோட்டை- சீவலப்பேரி ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

போக்குவரத்து

அப்போது அங்கு வந்த வாலிபர்கள் 4 பேர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பிச் செல்வதற்கு முயன்றனர். இதனை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் உடனடியாக அவர்களை மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது அந்த வாலிபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து சப்-இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்றனர். 

இதனை பார்த்து நொடிப்பொழுதில் சுதாரித்துக் கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் அங்கிருந்து சற்று தள்ளிச் சென்றார். இதனால் அவர் உயிர் தப்பினார். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார் உடனடியாக 4 வாலிபர்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர். 

போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த தினேஷ் (21),ஆனந்தன் (20), குணா (20), நெல்லையைச் சேர்ந்த கவியரசன் (20) என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்து இருந்ததும் தெரிய வந்தது.

உத்தரபிரதேச போலீஸ்

இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 230 கிராம் கஞ்சா, வாள், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் எப்படி இங்கு வந்தார்கள்? அவர்களுக்கு நெல்லை டவுனை சேர்ந்த கவியரசனுடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாகன சோதனையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை வாளால் வாலிபர்கள் வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை