பகீர்... புயல் மழையால் 2000 பேர் பலி... கொத்தாக அடித்துச் செல்லப்பட்ட வீடுகள், கார்கள்!!
வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 2,700க்கும் அதிகமானோர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில் வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் டேனியல் புயல் காரணமாக 2000 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
லிபியாவின் கிழக்கு பகுதியில் மத்திய தரைக்கடலிருந்து டேனியல் புயல் கடுமையாக தாக்கியது. இதனால், லிபியாவின் கடற்கரை நகரங்கள் சூறையாடப்பட்டன. அங்கு கடும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் டெர்னா பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளது. அனைத்து வீடுகளும் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால் டெர்னா பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் நகரங்களும் புயலின் கோரப்பிடியில் இருந்து தப்பவில்லை. லிபியாவின் கிழக்கு பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.
கார்கள், வீடுகள், அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணியில் பேரிடர் குழு ஈடுபட்டுள்ளது. மழை, சூறாவளி, வெள்ள பாதிப்பால் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஒசாமா ஹமத் தெரிவித்துள்ளார். மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து அந்நாட்டில் 3 நாட்கள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!