தீபாவளி ஸ்பெஷல்... 3.5 லட்சம் மக்கள் 20,000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளில் பயணம்!

 
பேருந்து
 

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஐ.டி. நிறுவனங்களில் வார இறுதி விடுமுறை இணைந்து மொத்தம் 3 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தி பலரும் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். சென்னையில் வேலை அல்லது படிப்பு காரணமாக தங்கி உள்ள ஆயிரக்கணக்கான மக்கள், இதுபோன்ற பண்டிகை காலங்களில் ஊர்களுக்குத் திரும்புவது வழக்கம்.

பேருந்து

தீபாவளியை முன்னிட்டு மொத்தம் 20,378 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னையிலிருந்து மட்டும் 14,268 பஸ்கள் கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் புறநகர் பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் அரசு பஸ்களில் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

பேருந்து

அரசு போக்குவரத்து துறை வெளியிட்ட தகவலின்படி, அக்டோபர் 16 முதல் 17 வரை மொத்தம் 6,920 பஸ்கள் இயக்கப்பட்டு, 3,59,840 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும் இதுவரை 1,39,400 பயணிகள் முன்பதிவு செய்து இருக்கிறார்கள். இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் சுமார் 1.5 லட்சம் மக்கள் அரசு பஸ்களில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?