ரூபாய் 200,00,000 மதிப்பிலான கஞ்சா பொருட்கள்! கமிஷ்னர் முன்னிலையில் தீ வைத்து எரிப்பு!

 
கமிஷ்னர் கஞ்சா எரிப்பு

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அதை விற்ற வியாபாரிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.

இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் அதிகரிக்கத் தொடங்கியது. ஒரே இடத்தில் குவிக்கப்படும் போதைப் பொருட்களால் ஆபத்து நேரிடகூடும். மேலும் போதிய இடவசதி இல்லாததையும் கருத்தில் கொண்டு அவற்றை அழிக்க போலீசார் முடிவு செய்தனர்.

கஞ்சா

இதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்காக வடக்கு மண்டல இணை கமிஷனர் ரம்யா பாரதி தலைமையில் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி, தடயவியல் துறை துணை இயக்குனர் ஆகியோரை உறுப்பினராக கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் போதைப் பொருட்களின் அளவு குறித்து பட்டியல் தயாரித்தனர். அதன் பின்னர் அவற்றை அழிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 

இதுவரை 60 வழக்குகளில் 1,300 கிலோ கஞ்சா, 30 கிராம் ஹெராயின், பிரவுன் சுகர் போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.2 கோடியாகும். தற்போது இவற்றை அழிப்பதற்கு இந்த வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. 

திருச்சியில் காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது!

இதைத் தொடர்ந்து சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு தினமான நேற்று இந்த போதைப் பொருட்களை எரித்து அழிப்பதற்கு போலீசார் திட்டமிட்டனர். அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கம் கிராமத்தில் ஆபத்தான ரசாயன பொருட்களை எரிக்கும் இடத்தில், 1,000 டிகிரி வெப்பத்தை தாங்கும் எந்திரத்தில் போதைப் பொருட்கள் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் அழிக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web