புயலால் உருவான கனமழையால் 21 பேர் பலி!! வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள்!!

 
மழை வெள்ளம்

பிரேசிலை  செப்டம்பர் 4ம் தேதி  கடும் புயலொன்று தாக்கியுளது. இதனால் பல மாகாணங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. தொடர் கனமழை காரணமாக ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து நகரின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடும் வெள்ளத்தில் சிக்கிய மியூகம் நகரின் பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. அங்கு ஒரே வீட்டில் 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  



இந்நிலையில், பிரேசிலை தாக்கிய புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். புயலில் வீடுகள் அடித்து செல்லப்பட்டதால் 2,300 பேர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  நகரின் ஆற்றில் மணிக்கு 2 மீட்டர் வீதம் நீர் அதிகரித்து வருவதால் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மழை வெள்ளம்

செப்டம்பர் 7ம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்வதற்குரிய சாத்திய கூறுகள் அதிகரித்துள்ளன.  மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால்  ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லும்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தொடர் மழை,புயல் , வெள்ளம் இவைகளால் பொதுமக்கள் பெரும்   கலக்கமடைந்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web