தொடர் கனமழையால் 21 பேர் பலி!!தத்தளிக்கும் வடகிழக்கு மாநிலங்கள்!!

 
அஸ்ஸாம்

அஸ்ஸாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இங்கு இயல்பை விட 272 மிமீ கூடுதல் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் 2,930-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

மழை

அஸ்ஸாமில் 25 மாவட்டங்களில் குறைந்தது 11 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், புதிதாக உருவாக்கப்பட்ட பஜாலி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும், பிரம்மபுத்திரா மற்றும் கௌரங்கா ஆறுகளின் நீர்மட்டம் பல பகுதிகளில் அபாய அளவை தாண்டி ஓடுகிறது.

அஸ்ஸாமில் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 43,398 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அசாமில் பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதில் வீடுகள் இடிந்தும், மரம் முறிந்து விழுந்தும் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. 

மழை

அசாம், மேகாலயாவில் கனமழை பாதிப்புக்கு இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் 12 பேரும் மேகலாயாவில் 19 பேரும் உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் இவர்களை ரப்பர் படகுகள் மூலம் முகாம்களுக்கு அழைத்து சென்றனர். தொடர் மழை காரணமாக அசாம் மற்றும் மேகாலயா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 20-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web