21 நக்ஸல்கள் சரண் ... ஏகே 47 துப்பாக்கிகள் ஒப்படைப்பு!

 
நக்சல்கள்

சத்தீஸ்கர் மாநிலத்தின் காங்கேர் மாவட்டத்தில் 21 நக்ஸல்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகளிடம் சரணடைந்தனர். இவர்களில் 13 பேர் பெண்கள் ஆவர். சரணடைந்தவர்கள் மூன்று ஏ.கே–47 துப்பாக்கிகள் உட்பட மொத்தம் 18 ஆயுதங்களையும் ஒப்படைத்துள்ளனர்.

நக்சல்கள்

பஸ்தர் சரக காவல்துறை நடத்திய ‘பூனா மார்க்கம்: மறு ஒருங்கிணைப்பின் மூலம் மறுவாழ்வு’ திட்டத்தின் கீழ் இந்த நக்ஸல்கள் சரணடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களில் கோட்டக் குழு செயலர் முகேஷ், நான்கு கோட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்பது பகுதி குழு உறுப்பினர்கள் மற்றும் எட்டு கீழ்மட்ட உறுப்பினர்கள் அடங்குவர்.

என்கவுன்டர் நக்சல்கள்

முன்னதாக அக்டோபர் 17 அன்று பஸ்தர் மாவட்டத்தில் மத்தியக் குழு உறுப்பினர் ரூபேஷ் உட்பட 210 நக்ஸல்கள் சரணடைந்தனர். அதேபோல் அக்டோபர் 2 அன்று பிஜாப்பூர் மாவட்டத்தில் 103 நக்ஸல்கள் சரணடைந்தனர். தொடர்ந்து நடைபெறும் இந்த சரணடைப்புகள், நக்ஸல் தாக்குதல் குறைந்துவருவதற்கான நேர்மறையான அறிகுறியாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!