அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 22 பேர் படுகாயம்... விறுவிறுப்புடன் களமிறங்கும் காளையர்கள்... !

 
ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இதுவரை 22 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  அதன்படி  மாடுபிடி வீரர்கள்  12 பேரும்,  காளை உரிமையாளர்கள் 6 பேரும், பார்வையாளர் ஒருவரும், காவலர்கள் 2 பேரும்,   பணியாளர் ஒருவர் என மொத்தமாக 22 பேர் இதுவரை படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த 22 பேரில்  3 பேர்   மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை முழுவதுமே ஒரே சமயத்தில் திரண்டு வந்திருக்கும் மக்கள் வெள்ளத்தில் குலுங்குகிறது. திரும்பும் இடங்களில் எல்லாம் திருவிழா தான். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் நேற்று  முன் தினமும், நேற்று பாலமேடு பகுதியிலும் பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைப்பெற்ற நிலையில், இன்று ஜனவரி 17ம் தேதி காலை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்க உள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டை முனியாண்டி திடலில் இன்று விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து  மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சங்கீதா சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நாளான இன்று ஜனவரி 17ம் தேதி  அலங்காநல்லூர் வாடிவாசல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருக்கும்.  

ஜல்லிக்கட்டு

சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு அலங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் மூடப்பட்டிருக்கும். மொத்தமாக அலங்காநல்லூர் வாடிவாசலை சுற்றியுள்ள 7 மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும். அத்துடன் அந்த நாட்களில்  மதுபான விற்பனை சில்லறைகள் தடை மீறி ஏதும் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார். 

ஜல்லிக்கட்டு மாடுகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை  முன்னிட்டு, மைதானம் தயார் நிலையில் உள்ளது. மாடுபிடி வீரர்களும், காளைகளின் உரிமையாளர்களும் முன்பதிவு செய்து, போட்டியில் பங்கேற்பதற்காக காத்திருக்கின்றனர். தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே அலங்காநல்லூர் ஜல்லிட்டு புகழ்பெற்றது. 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web