அடுத்த 3 மணி நேரத்திற்கு 23 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை.. !!

 
மழை

தமிழகத்தின்  அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர், ராமநாதபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உட்பட   23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நவம்பர் 30 ம் தேதி  வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பின் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதுவரை 3 புயல்கள்  உருவாகியுள்ளன. முதலில் உருவான தேஜ் புயல் ஓமனிலும், , அடுத்து வந்த ஹாமூன் மற்றும் மிதிலி புயல்கள், வங்க தேசத்திலும் கரையை கடந்தன. தமிழகத்தை பொறுத்தவரை, வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு புதிய  புயல் தாக்குதல்கள் ஏதும் இல்லை.

இடி மின்னல் மழை

இதுவரை தமிழகத்தில் பெய்த மழையால்  அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து, நீராதாரங்கள் நிரம்பியுள்ளன.காற்றழுத்த தாழ்வு பகுதி கடலில் நகரும் வேகம், திசை ஆகியவற்றை சென்னை, விசாகப்பட்டினம், கோல்கட்டா, புதுச்சேரி, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் உள்ள, 'ரேடார்'  மூலம் இந்திய வானிலை ஆய்வு மையம் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.  தற்போது இதன் காரணமாக உருவாகியுள்ள புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது.  இந்த புயல் காரணமாக  நாகப்பட்டினம் முதல் ஒடிசாவின் புவனேஸ்வர் வரையிலான கடற்பகுதிகளில், கன மழையுடன் சூறாவளி காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் பெய்த மழை அளவு நிலவரம்- பேரிடர் மேலாண்மை தகவல்..!!


அதேபோல, நாகை முதல் புவனேஸ்வர் வரை  கடற்பகுதியில், ஒரு இடத்தில் கரை கடக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர்  2ம் தேதிக்கு பிறகு தான்  புயலின் நகர்வு, கரை கடக்கும் நிலவரம் தெரியவரும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .  கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில், டிசம்பர்  3ம் தேதி  வரை மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web