பதற்றம்... ஆற்று வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயம்...!!

 
சிக்கிம் வெள்ளம்

இந்தியாவின் வட மாநிலங்களில் மேக வெடிப்பால் மழை கொட்டித்தீர்க்கிறது.இதனால் முக்கிய சாலைகள் மழை வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. சிக்கிம் மாநிலம்  லேசன் பள்ளத்தாக்கில் இருந்து உருவாகும் டீஸ்டா ஆற்றில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக டீஸ்டா ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.   இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக கேங்டாக் மாவட்டத்தில் சுமார் 30 கிலோமீட்டருக்கும் மேலான தூரத்திற்கு கடும் சேதங்கள் ஏற்பட்டன.

சிக்கிம்

 

 லோனார்க் ஏரியில் ஏற்பட்ட இந்த மேகவெடிப்பால்  கரைகள் உடைந்து தண்ணீர் டீஸ்டா ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றின் யின் மீது கட்டப்பட்டிருந்த இணைப்பு பாலம் அடித்து செல்லப்பட்டு விட்டன.  மேலும் சிங்க்டான் நகர் உட்பட 3 இடங்களில் பாலங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.  தொடர்ந்து  90 கிலோ மீட்டர் தூரத்திற்கு வீடுகள் சாலைகள் மற்றும் பாலங்கள் என ஏராளமான சேதத்தை ஏற்படுத்தி உள்ளன.  நதியின் கீழ் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

சிக்கிம்

இந்நிலையில் சேதங்களை மதிப்பிடவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் மாநில அரசு சார்பில் அவசரகால தொடர்பு மையம் உருவாக்கப்பட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.  அணைகள் மிகவும் மோசமாக சேதம் அடைந்து இருப்பதால் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.  இதனிடையே சிக்கிமில் பாதுகாப்பு பணியில் இருந்த 23 ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் சிக்கி மாயமாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ராணுவ வீரர்களை தேடும் பணியில் ராணுவத்தினரும், துணை ராணுவ படையினரும்  ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன்   தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த தொழிலாளர்களும் சேர்ந்தே அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web