இன்றும் 23 ரயில்கள் ரத்து... ரயில் பயணிகளே குறிச்சிக்கோங்க...!!

 
உஷார்!! நாளை 13 ரயில்கள் ரத்து!! வெளுக்க போகும் ஜாவேத் புயல்!

நேற்று தமிழகத்தில் வங்கக்கடலில் நிலவிய மிக்ஜாம் புயல் காரணமாக பெருமழை சென்னையை புரட்டிப்போட்டது.  பெருமழை காரணமாக 82 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மற்றும்  சென்னைக்கு வரும் ரயில்கள் என மொத்தம்  23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.   இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் “மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது.  சாலைகள், தண்டவாளங்கள், குடியிருப்புப்பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது.

ஊருக்கு கிளம்ப தயாராகிட்டீங்களா?! பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் அட்டவணை வெளியீடு!!

இதனால் சென்னையின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.  இதன் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் சென்னைக்கு வரும் ரயில்கள் என  மொத்தம் 82 ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இரவில் மழை ஓய்ந்திருந்தாலும்  வெள்ள நீர் முழுமையாக வடியவில்லை. இதனால் பல பகுதிகளிலும் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அத்துடன் சில இடங்களில் தண்டவாளங்களைக் கடந்து மழை நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. எனவே, இன்றும் 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு   ரயில்வே அறிவித்துள்ளது.
 அதன்படி சென்னை - மேட்டுப்பாளையம் நீலகிரி அதிவிரைவு ரயில்,  சென்னை - கோவை சேரன் அதிவிரைவு ரயில், சென்னை - போடிநாயக்கனூர் அதிவிரைவு ரயில், சென்னை - ஆலப்புழா அதிவிரைவு ரயில்,  சென்னை - மைசூரு அதிவிரைவு ரயில்,  செங்கல்பட்டு  - கட்சிக்குடா  அதிவிரைவு ரயில், சென்னை - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில்,  சென்னை -  கே எஸ் ஆர் பெங்களூர் ரயில், சென்னை  -, ஏற்காடு அதிவிரைவு ரயில், சென்னை -  பாலக்காடு அதிவிரைவு ரயில், கொல்லம் சென்னை அதிவிரைவு ரயில்  உட்பட பல ரயில்கள்   ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!..


அதேபோல தூத்துக்குடி - சென்னை  முத்து நகர் எக்ஸ்பிரஸ்,  தாம்பரம்  - நாகர்கோவில்  அந்தியோதயா எக்ஸ்பிரஸ், மதுரை - சென்னை தேஜஸ் ரயில், மதுரை - சென்னை பாண்டியன் விரைவு ரயில், செங்கோட்டை - சென்னை பொதிகை ரயில், செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயில், திருநெல்வேலி - சென்னை விரைவு ரயில், ராமேஸ்வரம் சென்னை விரைவு ரயில்கள், மதுரை - டெல்லி நிஜாமுதீன் விரைவு ரயில், திருச்செந்தூர்  - சென்னை,  குருவாயூர் - சென்னை விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web