நீர்வளத்துறையில் 235 பொறியாளர்கள் பணியிட மாற்றம்!! தமிழக அரசு அதிரடி!!

 
இடமாற்றம்

தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இது குறித்து சாதனை விளக்கக் கூட்டங்கள் , கொண்டாட்டங்கள்  நடத்தப்பட்டன. தேர்தல் வாக்குறுதியில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழக அரசு
மேலும் துறை வாரியான செயல்பாடுகள் , திட்டங்கள், விளக்கங்கள், காலதாமதத்திற்கான காரணங்கள் இவைகளை ஸ்டாலின் மாவட்ட வாரியாக ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து நிர்வாகங்களில் பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சுகாதாரத் துறை செயலர் உணவுத்துறைக்கு மாற்றப்பட்டார். அதன் ஒரு பகுதியாக அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு, பணியிட மாற்றம், புதிய அதிகாரிகளை நியமனம் செய்வது இவைகளையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.  

இடமாற்றம்

அந்த வகையில், இம்மாதத் தொடக்கத்தில் பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறையில் பொறியாளர்கள், பணியிட மாற்றம்,  கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் நீர்வளத் துறையில் 235 உதவி பொறியாளர்கள்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை   தமிழக அரசு அதிரடியாக  பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web