அதிகாரிகளுக்கு 25 மின்சார வாகனங்கள்!! முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைப்பு!!

 
ஸ்டாலின் கொடியசைப்பு

காற்று மாசுபாடு காரணமாகவும், தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதன் காரணமாக இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மின்சாரத்தால் இயங்கக்கூடிய வாகனங்களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 25 மின்சார வாகனங்களை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். 

ஸ்டாலின்

இந்த 25 மின்சார கார்களின மொத்த மதிப்பு சுமார் ரூ.3.42 கோடி ஆகும். அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 25 மின்சார கொள்முதல் செய்யப்பட்டு, தற்போது முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதைத்தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதேபோல சில விருதுகளையும் அவர் வழங்க இருக்கிறார்.

சார்ஜிங்

உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 3  மாவட்ட கலெக்டர்களுக்கு பசுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, 5 தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர்கள் விருதுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.முதல்வர் மின்சார வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web