சபரிமலை பக்தர்களுக்காக 25 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் !

 
சபரிமலை
 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்காக தமிழ்நாடு அரசு 25 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை அனுப்பி வைக்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மண்டல காலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு மண்டல பூஜைகளுக்காக கோயில் வரும் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. மறுநாள் முதல் மண்டல கால பூஜைகள் ஆரம்பமாகி, டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜையுடன் நிறைவடைகின்றன.

சபரிமலை

தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், ஒரு நாளைக்கு மொத்தம் 90000  பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 70000  ஆன்லைன் முன்பதிவு மூலம், மேலும் 20 ஆயிரம் உடனடி முன்பதிவாக இடம் பெற்றுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் கேட்டுக்கொண்டதை அடுத்து தமிழ்நாடு அரசு பிஸ்கட் பாக்கெட்டுகளை அனுப்ப தீர்மானித்துள்ளது.

சபரிமலை கூட்டம்

இதன் அடிப்படையில் வரும் 4ஆம் தேதி 25 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாடு பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும், பாதுகாப்பு மற்றும் உணவு உதவிகளும் கேரள அரசின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!