பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.250 அபராதம்... வாரணாசி நகராட்சியில் அமலுக்கு வருகிறது!

 
எச்சில் துப்புவோர்
 

உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாராணசி நகராட்சியில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பேணும் நோக்கில் புதிய அபராத விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.வாராணசி நகராட்சியின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி சந்தீப் ஸ்ரீவாஸ்தவா தெரிவிக்கையில், “உத்தர பிரதேச திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார விதிகள் (2021)” தற்போது வாராணசியில் முழுமையாக அமலுக்கு வந்துள்ளது. இதன் படி, பொது இடங்களில் எச்சில் துப்புவோர் மீது ரூ.250 அபராதம் விதிக்கப்படும். வாகனங்களில் இருந்து குப்பை அல்லது எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல், சாலையில் சுற்றித் திரியும் மிருகங்களுக்கு உணவு வழங்கினால் ரூ.250, பூங்கா, சாலை உள்ளிட்ட பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மேலும், நீர்நிலைகளில் குப்பை கொட்டினால் ரூ.750 மற்றும் மூடப்படாத லாரிகளில் குப்பை எடுத்துச் சென்றால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்” என்றார். 

இந்த புதிய நடைமுறையின் மூலம் நகரின் தூய்மையையும், பொது சுகாதாரத்தையும் பாதுகாக்க அரசு உறுதியாக நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!