28 வயசு தான் ஆச்சு... பேசிக் கொண்டிருந்த போதே மருத்துவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!!

 
மருத்துவர்

சமீபகாலமாக இளவயது மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருகின்றன. நடனம் ஆடிக் கொண்டிருந்த போது மரணம் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மரணம், மணமேடையில் மயங்கி விழுந்து மரணம், பள்ளியில் விளையாடிய போது மரணம், கல்லூரியில் மாணவன் பேசிய போது மரணம் என அதிகரித்து வருகிறது. கொரோனா காலத்திற்கு பிறகு இத்தகைய திடீர் மரணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.


 

மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப்பழக்க வழக்கம், வேலைப்பளு என என்ன வகையான காரணம்  கூறினாலும் இத்தகைய மரணங்களை ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த மருத்துவர், திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர் ஒருவர்  நண்பர்களுடன் அமர்ந்து  சிரித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வாயுப்பிரச்சனையாக இருக்கலாம் என  நினைத்து மருத்துவர் அபிஷேக் அசிடிடிட்டி மருந்து சாப்பிட்டுள்ளார்.

மருத்துவர்

 மருந்து சாப்பிட்ட பிறகும் வலி குறையாததால் நண்பரின் பைக்கில் மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அபிஷேக் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.மாரடைப்பால் 28 வயது மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பெரும் அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web