பயங்கர சோகம்... நிலநடுக்கத்தில் 2901 பேர் பலி; 5530 பேர் படுகாயம்! நிலைகுலைந்த மொரோக்கோ!

 
மொரொக்கா

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் செப்டம்பர் 9ம் தேதி அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்தன. இந்த நிலநடுக்கம்  அந்நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கோர நிலநடுக்கத்தால்  சுற்றுலா நகரமான மராகெச் மிகக் கடுமையான பாதிப்பு அடைந்துள்ளது. தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பலர்  அப்படியே பூமிக்குள் சரிந்தனர்.


அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 8.36 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. இதனை தொடர்ந்து, 19 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 4.9 அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பல மணி நேரம் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.  அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.  ஆயிரக்கணக்கானோர் பரிதாபமாக இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 
மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மொரொக்கா

 

 இறந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. அதே போல் படுகாயம் அடைந்தவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். குவியல் குவியலாக தோண்ட தோண்ட சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால்  பலி எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது.  இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 2,901 ஆக அதிகரித்துள்ளது. இதுபோன்று இடிபாடுகளில் சிக்கி 5,530 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது  நாடு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஸ்பெயின், யுனைடெட் கிங்டம் மற்றும் கத்தார்  நாடுகளைச் சேர்ந்த தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் மொராக்கோவில்  மீட்பு  பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web