சென்னை உட்பட 29 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை!

 
school rain
 

அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சியும் மழை ஏற்பட காரணமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மழை

இந்த வானிலை மாற்றத்தின் தாக்கமாக, இன்று (அக். 16) தமிழகத்தின் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 19ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தைவான் சீனா புயல் கனமழை  மழை வெள்ளம்

இந்நிலையில், அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மொத்தம் 30 மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?