இந்தியாவில் ஒரு மாதத்தில் 2.31லட்சம் எக்ஸ் கணக்குகள் நீக்கம்... பயனர்கள் அதிர்ச்சி!

 
எலான் மஸ்க்

ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க்கிற்கு கைமாறிய பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஊழியர்கள் நீக்கம், பெயர் மாற்றம் , ப்ளூ டிக், மாத சந்தா என அடுத்தடுத்துஅதிரடி நடவடிக்கைகள் தான். அந்த வகையில் கடந்த ஒரு மாத காலமாக  இந்தியாவில் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட 2 லட்சத்துக்கும் அதிகமான ட்விட்டர் கணக்குகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.  

எக்ஸ்

2023 டிசம்பர் 26 முதல் இந்த ஆண்டு ஜனவரி 25 வரையிலான ஒரு மாத காலத்தில், சிறார் ஆபாசப் படங்களை பகிர்வது, அனுமதியின்றி எடுக்கப்பட்ட நிர்வாணப் படங்கள் பதிவிட்டவர்கள்  ஆகியோரை கணக்கெடுத்து   விதிமீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த இந்தியாவைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்துக்கு 31 ஆயிரம் கணக்குகளை எக்ஸ் சமூக வலைதளம் நீக்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.   2021ல் இந்தியா சார்பில்  கொண்டுவரப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப சட்டவிதிகளின்படி பதிவான 2,525 புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக எக்ஸ் நிர்வாகம்  விளக்கம் அளித்துள்ளது.  

 எலன் மஸ்க்

இதில் சுமார்  1,945 கணக்குகள் தங்கள் பக்கங்களில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவித்து பதிவிட்டவை என அதிர்ச்சிகரமான தகவலும் வெளியாகியுள்ளது.  
ஏற்கனவே 2023ல் நவம்பர் 26 முதல் டிசம்பர் 25 வரை இந்தியாவில் 2.27லட்சம் டிவிட்டர் கணக்குகள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எக்ஸ் நிர்வாகம் ஒவ்வொரு மாதமும் பயனர்களிடம் இருந்து புகார்களை பெற்று வருகிறது.    வீதிமீறலின் தன்மையை பொறுத்து, நிரந்தர நீக்கம், தற்காலிக நீக்கம்  போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web