தூத்துக்குடியில் மாயமான 10ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் மீட்பு!

 
தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாயமான பள்ளி மாணவர்கள் 3பேர் மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் 3 பேர் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு செல்லாமல் மாயமாகி விட்டனர். இது குறித்து அவர்களது பெற்றோர் அளித்த புகார்களின் அடிப்படையில் தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

பெண் போலீசார் காவலர்

இந்நிலையில் காணாமல் போன மாணவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று இரவு நெல்லையில் மீட்டுள்ளனர். பின்னர் இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாணவர்கள் 3 பேரும் உரிய விசாரணைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?