3 மகள்களை கழுத்தை அறுத்துக் கொலை!! பகீர்!!

 
மகள்

கேரள மாநிலம், கோட்டயம் ராமாபுரம் பகுதியில் வசித்து வருபவர்   ஜோமோன் .  கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் ஜோமோன், தனது மகள்கள் அனன்யா , அனாமிகா  , அமேயா  3 பேருடன் வசித்துவ் வந்தார். இந்நிலையில் நள்ளிரவு ஜோமோன் தனது 3 மகள்களின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயற்சித்தார். பின்னர்   அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கத்திக்குத்து

தந்தையால் கழுத்து அறுக்கப்பட்ட சிறுமிகள் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.  அக்கம்பக்கத்தினர் இதனைக் கண்டு உடனடியாக  காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 சிறுமிகளையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அத்துடன்  ஜோமோனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  3 குழந்தைகளையும் கழுத்து அறுத்து கொலை முயற்சி  தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

போலீஸ்


மனைவி பிரிந்து சென்ற விரக்தியில்,   இந்த முடிவை எடுத்திருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். இது குறித்து ஜோமோனின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிகள் 3 பேரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 3 மகள்களின் கழுத்தை அறுத்துவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை