3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப் போகும் கனமழை!!

 
இடி மின்னல் மழை

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அக்டோபர் 9ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும்.

மழை

கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை அக்டோபர் 5ம் தேதி தமிழகம், புதுச்சேரி  காரைக்கால்  பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 9 மற்றும் 10 ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை

சென்னையை பொறுத்தவரை சென்னை  மற்றும் புறநகர் பகுதிகள்  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும்.  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.  தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு  55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் இதனா இன்றும் நாளையும்  மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என   அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web