19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி, தமிழகத்தின் மீது கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் நாளை (நவம்பர் 9) திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வட மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை (நவ.10) முதல் புதன்கிழமை (நவ.12) வரை தென் தமிழகத்தின் பல இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் தொடர்ச்சியான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, புதன்கிழமை அன்று 19 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கும். இதேசமயம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஞாயிறு) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
