பைக்கில் ட்ரிபிள்ஸ் சென்ற 3 நண்பர்கள் ஆம்னி வேன் மோதி பலி!!

 
ராசேந்திரன்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி  சத்திரம் கிராமத்தில் வசித்து வருபவர்   இராசேந்திரன். இவரது நண்பர்க, அன்பரசன், லிங்கேஸ்வரன். இவர்கள் மூவரும்  மேலசெல்வனூர் ஊரில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியை காண மோட்டார் சைக்கிளில் டிரிபிள்ஸ் சென்றனர்.  

விபத்து

சாத்தங்குடி விலக்கு அருகே சென்ற போது, ராமநாதபுரம் புத்தேந்தல் பகுதியில் இருந்து மின்னல் வேகத்தில் ஆம்னி வேன் ஒன்று  வந்தது. இந்த வேன்  மாணவர்களின் மோட்டார் சைக்கிளுடன்  பயங்கரமாக மோதியது. இதில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது.

ஆம்புலன்ஸ்

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இராசேந்திரன், அன்பரசன்   சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் லிங்கேஸ்வரன் ஆம்புலன்சில்  உயிரிழந்தார். 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆம்னி வேன் ஓட்டுநர் பாலமுருகன் தலையில் படுகாயம் மடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆடல் பாடல் நிகழ்ச்சியை காணச்சென்ற நண்பர்கள்  3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web