நெல்லை தாமிரபரணியில் பல கோடி மதிப்பிலான 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு!

 
ஐம்பொன் சிலைகள்

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே தாமிரபரணி ஆற்றில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று பழமையான ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேரன்மாதேவி அருகே உள்ள சக்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் நேற்று தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது அவர்கள் நீர்மட்டத்துக்குள் மின்னும் பொருளைக் கவனித்து அருகே சென்றபோது, மூன்று சிலைகள் கிடப்பதைக் கண்டனர். அவற்றை மேலே எடுத்து பார்த்தபோது, அவை ஐம்பொனால் வடிவமைக்கப்பட்ட மதச்சிலைகள் என்பது தெரியவந்தது.

காவிரி ஆறு வைகை தாமிரபரணி

மூன்று சிலைகளில் ஒன்று சுமார் இரண்டு அடி உயரம் கொண்டது. அதில் காளை மீது அமர்ந்திருக்கும் தெய்வம் நான்கு கரங்களுடன் சங்கு ஏந்தியவாறு இருந்தது. மற்ற இரண்டு ஒரு அடி உயர சிலைகளில் ஒன்று ஐந்து முகங்களுடன் அமர்ந்திருக்கும் அம்மனைப் போன்ற வடிவிலும், மற்றொன்று நின்ற நிலையிலான பெண் தெய்வ வடிவிலும் இருந்தது.

இச்சம்பவம் குறித்து உடனே தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, மூன்று சிலைகளையும் பாதுகாப்பாக மீட்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தாமிரபரணி

பழமைவாய்ந்த இந்த சிலைகள் அருகிலுள்ள கோவில்களில் இருந்து மர்ம நபர்களால் திருடப்பட்டவையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. திருட்டு வெளிச்சத்துக்கு வந்துவிடுமோ எனக் கவலைப்பட்டு குற்றவாளிகள் அவற்றை ஆற்றில் வீசியிருக்கலாம் என்றும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?