செண்டர் மீடியனில் மோதி கார் தீப்பிடித்து 3 பேர் பலி!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காட்டன் மில் அருகே கார் ஒன்று சுற்றுலா சென்று கொண்டிருந்தது. இந்தக் கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இது குறித்து வெளியான முதல்கட்ட தகவலின் படி சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 25 வயது சம்சுதீன், கொளத்தூர் ரிஷி, ஆவடி மோகன் உயிரிழந்தனர்.

ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் சாலையில் இருந்த சென்டர் மீடியன் மீது மோதி கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. சென்னையில் இருந்து மூணாறுக்கு சுற்றுலா சென்ற போது விக்கிரவாண்டி அருகே விபத்துகுள்ளானது. அப்துல் அஜீஸ், தீபக் மூவரும் படுகாயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
