மாநிலம் முழுவதும் 3 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து!!

 
ரேஷன் விரல் பதிவு கைரேகை

இந்தியா முழுவதும்  “ ஒரே நாடு ஒரே ரேஷன் ” திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் எந்த பகுதியில் வசித்தாலும்  ரேஷன் கார்டுகள் மூலம் மானிய விலையில் உணவு தானியங்களை பெற்றுக் கொள்ளலாம்.  பல மாநிலங்களில் ரேஷன் பொருள்கள் தேவையானவர்களுக்கு சென்று அடையாமல் வெளி சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக  புகார்கள்  வந்த வண்ணம் உள்ளன.

ரேஷன்

இதனையடுத்து  கேரளா, பஞ்சாப்  மாநிலங்களில் ஆய்வு மேற்கொள்ளும் தீவிர நடவடிக்கையில் அந்தந்த மாநில அரசுகள் இறங்கியுள்ளன. அதன்படி ரேஷன் பொருட்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்தால்  அவர்களின் கார்டு ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   அந்த வகையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் தகுதி இல்லாத 3 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரேஷன்

இந்த ரேஷன் கார்டுகள் அதிகப்படியாக இருந்ததால் மக்களுக்கு இலவச ரேஷன் கிடைக்கவில்லை.  95 சதவீத விசாரணை பணிகள் முடிவடைந்து விட்டன. இதன் பிறகு தகுதியானவர்களுக்கு அரசின் சலுகைகள் சரியானபடி சென்று சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  ஏராளமான கார்டுதாரர்கள் வறுமைக் கோட்டின்  கீழ்  சரியாக வராததால் அவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விசாரணைக் குழு விளக்கம் அளித்துள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web