துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி!! மணிப்பூரில் தொடரும் கலவரம்!!

 
மணிப்பூர்

மணிப்பூர் மாநிலத்தில்  கடந்த மே மாதம் முதல் கலவரம் வெடித்துள்ளது. அங்கு வசித்துவ் அரும்   மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து   குகி பழங்குடியின மக்கள் பேரணி நடத்தினர்.   இந்த பேரணியில் வன்முறை ஏற்பட்டு  பெரும் கலவரமாக மூண்டது. இந்த கலவரத்தில் இதுவரை 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை  இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  

மணிப்பூர்

கலவரம் தொடங்கி 4 மாதங்கள் ஆகியும், இன்னுமும் கூட அங்கு பதற்றம் நீடித்து வருகிறது.  மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு மணிப்பூரின் தெங்னெவ்பால் மாவட்டத்தில் பல்லேல் நகரில் ஏற்பட்ட வன்முறையில் 3 சுட்டுக்கொல்லப்பட்டனர். பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

மணிப்பூர்
நேற்று  கங்போப்கி மாவட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த 3 பேர் தடைசெய்யப்பட்ட ஆயுத கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு இம்பால் மேற்கு மற்றும் கங்போக்கி மாவட்டங்களின் எல்லை பகுதியில் இருக்கும் இரெங் மற்றும் கரம் கிராமங்களுக்கு இடையில் அமைந்துள்ள காங்குய் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. வாகனங்களில் வந்து இறங்கிய ஆயுத கும்பல்   கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது.   இதில் குகி-சோ என்ற பழங்குடியின மக்கள்   3 பேர் கொல்லப்பட்டனர். இதனால்  இம்பால் மேற்கு மற்றும் கங்போக்பி மாவட்டங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web