3 வயது சிறுவன் தெருநாய் கடித்து பலி... தொடரும் சோகம்!
தமிழகத்தில் தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த மாசிநாயக்கனப் பள்ளியில் உள்ள பசுமைகுடிலில் உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த வடமாநில குடும்பத்தினர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் 3 வயது சத்தியா என்ற சிறுவன் வெளியில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது தெருநாய் முகம் உட்பட பல பகுதிகளில் கடித்து குதறியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்றும் தொடர் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிறுவனை பெற்றோர் அழைத்து சென்ற நிலையில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவன் ரேபிஸ் நோய் தாக்கத்தால் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
