சாப்பாடு காலியாகிடுச்சு...” நள்ளிரவில் ஹோட்டல் உரிமையாளரைத் தாக்கிய 3 இளைஞர்கள்!

 
இளைஞர்கள்
 

சென்னை ராமாபுரம் பகுதியில் ஓட்டல் செந்தில்குமார் (47) என்பவர் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது ஹோட்டலுக்கு இரவு நேரத்தில் உணவு தீர்ந்த நிலையில், 3 பேர் வந்து சாப்பிட என்ன இருக்கிறது என்று கேட்டுள்ளனர்.நேரமாகி விட்டதால் சாப்பாடு அனைத்தும் தீர்ந்து விட்டது. ஹோட்டலை மூடப் போகிறோம் என்று செந்தில்குமார் கூறியுள்ளார். 

ஆம்புலன்ஸ்

இதனால், ஆத்திரமடைந்த 3 பேரும் தகராறு செந்தில்குமாரிடம் தகராறு செய்துள்ளனர். ஹோட்டலில் இருந்த செந்தில் குமாரின் மகன் மோகன் பிரபு, தனது தந்தையிடம் இளைஞர்கள் தகராறு செய்வதைப் பார்த்து அவர்களிடம் இது குறித்து கேட்டுள்ளார். 

உடனே 3 பேரும் சேர்ந்து பிரவுவை கற்களாலும், கட்டையாலும் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.இது குறித்து தகவல் அறிந்து ராமாபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று காயம் அடைந்த மோகன் பிரபுவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

உத்தரபிரதேச போலீஸ்

பின்னர், வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராமாபுரம் தீபக் (21), ஆகாஷ் (22), பிரவீன் குமார் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை