சனிபகவான் புரட்டி எடுக்கப் போகும் 3 ராசிக்காரர்கள் ... எச்சரிக்கையா இருங்க!

 
சனிபகவான்

நவக்கிரகங்களில் நீதியரசன் சனீஸ்வரர். இவர் நம்முடைய கர்மா பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சரியாக நீதி வழங்கக் கூடியவர்.  நிழல் கிரகமாக விளங்கக்கூடிய இவர் மிகவும் மெதுவாக நகரக் கூடியவர்.நம்முடைய செயல்களுக்கு ஏற்ப நன்மை தீமைகளை சரியாக கொடுப்பதால் பலருக்கும் இவரை கண்டாலே அச்சம் தான்.  
சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அதுவரை இவரின் தாக்கம் நீடிக்கும்.  ஜாதகத்தில் சனி பகவான் நிலையை தான் முதலில் தெரிந்து கொள்வர். அவர் சரியான இடத்தில் இருந்தால் மற்ற அனைத்து செல்வங்களும் தானாக வந்து சேரும்.  மோசமான நிலையில் இருந்தால் எத்தனை பெரிய ராஜாவாக இருந்தாலும்  உச்சகட்ட கொடூர பிரதிபலன்களை அனுபவிக்க வேண்டியது தான் என்கின்றனர் ஜோதிட வல்லுனர்கள்.  

ராசிபலன்கள் ராசி ஜோதிடம்


சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கிறார். சொந்த வீட்டில் இருக்கும் போது பலரும் மகிழ்ச்சியான சூழலில் இருப்பர்.இதனால் பொதுவாக பெரும் கொடுபலன்களை யாருக்கும் தரமாட்டார்.   30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பத்தில் தங்கியிருக்கும் சனீஸ்வரர்   பிப்ரவரி 11ம் தேதி இன்று   கும்ப ராசியில் சனிபகவான் அஸ்தமனம் ஆகின்றார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் எச்சரிக்கையாக  இருக்க வேண்டியது அவசியம்.  

தனுசு ராசி
 
தனுசு ராசிக்காரர்களே 
சனிபகவான்  தனுசு  ராசியில்  3 வது வீட்டில் அஸ்தமனம் ஆகின்றார். இதனால்  பல்வேறு விதமான சிரமங்கள் ஏற்படலாம். உறவினர்களால் சங்கடங்கள் உருவாகலாம்.  தன்னம்பிக்கை  குறைவு ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். பணிச்சுமை அதிகரிக்கும். தொழிலில் வருமானம் குறையும். புதிய முயற்சிகளில்  இறங்காமல் இருப்பது நல்லது. காரியத்தடை, காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கிய குறைபாடு உருவாகலாம்.  வெளியூர் பயணங்களில்  எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.   மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம்.  

துலாம் ராசி

rasi
 
துலாம் ராசிக்காரர்களே
துலாம் ராசியின் 5வது வீட்டில்   சனிபகவான் அஸ்தமனம் ஆகின்றார். குழந்தைகளால்   சிக்கல் ஏற்படலாம்.  உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை அவசியம்.  தொழில் ரீதியாக பல்வேறு விதமான சங்கடங்கள் ஏற்படலாம். பணிபுரியும் இடத்தில்  சக ஊழியர்களால் சிக்கல்கள்  உருவாகும். கொடுக்கல் வாங்கலில்  நஷ்டம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். ஜாமீன் கையெழுத்துக்கள் போடுவதை தவிர்ப்பது உத்தமம். 

கன்னி ராசி
 
கன்னி ராசிக்காரர்களே
கன்னிராசியில்   சனி பகவான்  6 வது வீட்டில் அஸ்தமனம் ஆகின்றார். மிக  மிக   கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.   தொழிலில்  புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இருக்கும் பணியிலும் கடுமையான உழைப்புக்கு பிறகே பலன்கிட்டும்.   கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். மன அழுத்தம்  காரணமாக பணி புரியும் இடத்தில் பகைமை ஏற்படலாம். சக ஊழியர்களால் சங்கடங்கள் பெருகும்.  எவரையும் நம்பாமல் தீர யோசித்து முடிவெடுப்பது நல்லது.   பூர்வீக சொத்துக்கள், வழக்குகளில்   இழுபறி நிலை உருவாகும். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web