சூப்பர்... 29 நாட்களில் 30 பேர் உடல் உறுப்பு தானம்...!

 
உறுப்பு தானம்

தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.இந்த அறிவிப்புக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.  தினசரி விபத்துக்கள் , தீராத நோய்கள்,  பிறவி குறைபாடு மற்றும் தீக்காயங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிதைந்த உறுப்புக்களுக்கு பதிலாக மாற்று உறுப்புக்கள் பொருத்தப்படுகின்றன.   அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு மாற்று உறுப்புகள் தேவைப்படுவதன் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை


 சாலை விழிப்புணர்வு மக்களிடையே  இல்லாத காரணத்தால் பெரிய அளவிலான விபத்துக்களும், சில நேரங்களில் மூளைச்சாவும் ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது.  விபத்துகளில் மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உடல் உறுப்புகள் யாருக்கும் பலனின்றி மண்ணில் போகிறது.  உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருந்து வந்தது.  2023, செப்டம்பர் 23ம் தேதி உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழக முதல்வர்  ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார்.சமீப காலமாக  மூளைச்சாவு அடைந்த நபர்களின் உறவினர்கள், உடல் உறுப்பு தானம் அளிக்க ஒப்புதல் அளித்து வருகின்றனர்.  

உறுப்பு தானம்

இதனைத் தொடர்ந்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் உடல் உறுப்பு தானம் செய்தவரின் இல்லத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்  கடந்த 29 நாட்களில், 30 பேர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர் என தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி 2024 ஜனவரி 1 முதல் 29ம் தேதி வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில்,   சிறுநீரகம் 48 பேர், கல்லீரல் 27 பேர், இதயம் 10 பேர், நுரையீரல் 13 பேர் என தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்  எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த உடல் உறுப்புகளால் பலர் பயன் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web