பள்ளியில் மயங்கி விழுந்த 30 மாணவர்கள்! விழுப்புரம் அருகே பரபரப்பு!

 
மயங்கிய மாணவர்கள்

விழுப்புரம் அருகே பள்ளியில் கொடுத்த சத்து மாத்திரையை சாப்பிட்ட 30 மாணவ, மாணவிகள், அடுத்தடுத்து வாந்தி எடுத்து, மயக்கமடைந்ததால், பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் அருகே வெங்கந்தூர் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கோடு பள்ளி மாணவர்களுக்கு நேற்று சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. 

போலீசார்

இதனை சாப்பிட்ட மாணவ மாணவிகள் 30 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து, உடனடியாக இவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
விழுப்புரம்

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர்கள் வீடு திரும்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மாணவர்களின் நலன் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்து மாணவர்களுக்கு தைரியமூட்டினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web