வீடுகளில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்.. !

 
சோலார்

இன்று பிப்ரவரி 1ம் தேதி வியாழக்கிழமை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில் கவர்ச்சிகரமான அறிவிப்புக்கள் வெளியாகலாம் என எதிர்பார்த்திருந்தனர். வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். அதில் இந்தியா முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் மின் வசதி ஏற்படுத்தித் தரப்படும். சோலார் மின் வசதி ஏற்படுத்தி உற்பத்தி செய்யும் வீடுகளுக்கு முதல் 300 யூனிட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என   நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சோலார்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கப்பட்டது. நடப்பாண்டின்   முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவை உறுப்பினர்களின் கூட்டுக்கூடத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றினார். இன்று  பிப்ரவரி 1 ம்தேதி வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இன்று  இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யமுடியும்.

நிர்மலா சீதாராமன்

தேர்தலுக்கு பிறகு   புதிய அரசு, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் . அதன்படி இன்று பிப்ரவரி 1ம் தேதி  வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர்   நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் 6வது பட்ஜெட் இது.  இதற்கு முன்பு மொரார்ஜி தேசாய் மட்டுமே 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.  இதன் மூலம் மொரார்ஜி தேசாயின் சாதனையை நிர்மலா சீதாராமன் சமன் செய்துள்ளார்  . தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்படும் இந்த  பட்ஜெட்  மத்திய அரசின் வரவு மற்றும் செலவு திட்டங்களுக்கான அறிக்கையாகவே இருக்கும் என பொருளாதார நிபுணர்களின் கணிப்பிற்கு தக்க வகையில் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

.

From around the web