பகீர்... மேகவெடிப்பால் 14 பேர் பலி.. 102 பேர் மாயம்...3000 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு!!

 
சிக்கிம் வெள்ளம்

சிக்கிம் மாநிலத்தில் லோனாக் ஏரியின் மீது   திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு   காரணமாக, தீஸ்தா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில்   23 இந்திய இராணுவ வீரர்கள் மாயமானதாக முதற்கட்ட தகவல் வெளியானது.அவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன

சிக்கிம்

அக்டோபர் 8ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. இந்த   வெள்ளப்பெருக்கில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதில் 22 இராணுவ வீரர்கள் உட்பட 102 பேர் காணவில்லை .   அம்மாநிலத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 3,000 சுற்றுலாப் பயணிகள்  சிக்கித் தவித்து வருகின்றனர். இதனை   சிக்கிம் தலைமைச் செயலாளர்  உறுதி செய்துள்ளார்.   இந்த விபத்தை இயற்கை பேரிடராக அம்மாநிலம் அறிவித்துள்ளது.  

மேகவெடிப்பு

தற்போது, காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக  NH-10 தேசிய நெடுஞ்சாலை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அதே நேரத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பல குழுக்களாக பிரிந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web