சென்னை சாலைகளில் கேட்பாரற்று கிடந்த 3,000 வாகனங்கள் அகற்றம்!
சென்னை மாநகரப் பகுதியில் சாலையோரத்தில் கேட்பாரற்று கிடந்த 3,000க்கும் அதிகமான வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது. அந்த வாகனங்களை ஏலம் விடவும், அவை குற்ற வழக்குகளில் தொடர்புடையவையா என கண்டறியவும் மாநகர காவல்துறையின் உதவியை மாநகராட்சி நிர்வாகம் கோரியுள்ளது.
பல மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் குறித்த அறிவுறுத்தல்கள் செய்யப்பட்டு வரப்படுகின்றன. மழைக்காலங்களில் நோய் பரவலும் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சாலைகளில் தொடர்ந்து 2, 3 நாட்களுக்கு மேல் நிற்கும் வாகனங்கள் குறித்து புகார் தெரிவிக்க போலீசாரும் அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில், கடந்த முறை டெங்கு பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க அப்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த தா.கார்த்திகேயன் எடுத்த நடவடிக்கை காரணமாக, சென்னை சாலையோரங்களில் இருந்த 5,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் அகற்றப்பட்டு ஏலம் விடப்பட்டன. ஏலம் மூலமாக கிடைத்த தொகை, மாநகரில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவ பயன்படுத்தப்பட்டது.
தற்போது மீண்டும் பழையபடி சென்னையில் சாலையோரங்களில் பழைய வாகனங்கள் நிறுத்துவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில், இதுபோன்ற வாகனங்களை அகற்றி ஏலம் விடப்படும் என்று மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மாநகராட்சி மன்றத்தில் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சென்னையில் 3,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் அகற்றப்பட்டுள்ளன.
இதையடுத்து இந்த வாகனங்கள் வழக்குகளில் தொடர்புடையவையா என காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!