வயலில் பள்ளம் தோண்டிய போது ஆச்சரியம்.. 3,000 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுப்பு..!

 
பணடைய கால பொருட்கள்

திருப்பத்தூரை அடுத்த கந்திலி தொப்பலகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சீனிவாசன். இவர் இன்று காலை தனது விவசாய நிலத்திற்கு பைப்லைன் போடுவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டினார். சிறிய பானைகள் மற்றும் மண் தடயங்கள், மண் பாத்திரங்கள், கருப்பு மற்றும் சிவப்பு மண் பாண்டங்கள் மற்றும் மண் பாத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. மேலும் இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவித்தார்.

Tirupathur, Tirupathur : திருப்பத்தூர்: கந்திலி பகுதியில் தண்ணீர்  தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ...

திருப்பத்தூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி தாசில்தார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும், தொல்லியல் ஆய்வு செய்து வரும் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியரான ஏ.பிரபு சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். இங்கு காணப்படும் அனைத்து பொருட்களும் கற்காலத்தை சேர்ந்ததாக இருக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

அதாவது கற்காலத்திலிருந்தே அன்றைய காலத்து மனிதர்கள் தங்களின் முக்கிய நபர்களை அவர்கள் இறக்கும் தருவாயில் மண்ணுக்கு அடியில் புதைப்பதும், தாங்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களை அவர்களுடன் புதைப்பதும் வழக்கம். அந்த வகையில் இந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கறுப்பு சிவப்பு மண் பாண்டங்களாக காணப்பட்டதோடு, ஈம பிழை உடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் இந்த திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆரம்பகால வரலாற்றை எடுத்துக்காட்டுகின்றன. இது ஏறத்தாழ மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தியதாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசின் தொல்லியல் துறை இந்த இடத்தில் முறையான அகழாய்வு நடத்தும் போது மேலும் பல உண்மைகள் வெளிவர வாய்ப்பு உள்ளது.

 தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web