பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.30,000 வரவு வைக்கப்படும்... தேஜஸ்வி யாதவ் உறுதி!

 
தேஜஸ்வி யாதவ்
 

பீகாரில் ஆட்சிக்கு வந்தவுடன் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு மேலாக ரூ.300, கோதுமைக்கு ரூ.400 வழங்கப்படும் என ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார். 243 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

பீகார் முதல்வர்  நிதிஷ் குமார்

பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ், “பீகாருக்காக பாஜக எதையும் செய்யவில்லை. இந்த முறை மகா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகாரில் இருந்து வேரோடு பிடுங்கப்படும்,” என்றார்.

பீகார்

மேலும் அவர், “பெண்களுக்காக நாங்கள் அறிவித்துள்ள திட்டங்களை தாய்மார்களும் சகோதரிகளும் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். வரும் ஜனவரி 14-ஆம் தேதி மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.30,000 வரவு வைக்கப்படும். இது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படும். இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு ரூ.1.5 லட்சம் நிதி உதவி கிடைக்கும்,” என தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!