காற்று, மழையால் 31 விமானங்கள் தாமதம்!! பயணிகள் கடும் அவதி!!

 
விமான நிலையம்

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது . அதன் தொடர்ச்சியாக தலைநகர் சென்னையில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால்  31 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

விமான நிலையம்

இதனால் பல்வேறு சாலைகளில் வெள்ளநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எழும்பூர் கோயம்பேடு உட்பட பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது . இதில் அதிகபட்சமாக தாம்பரம் - 13 செ.மீ., தரமணி - 11 செ.மீ., கட்டப்பாக்கம் - 9.5 செ.மீ., சென்னை விமானநிலையம் - 9 செ.மீ., மழை அளவு பதிவாகி உள்ளது. தொடர் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக  ஜெர்மனி, தோகா, துபாய், மும்பையில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் தடுமாறின.

knife airport விமான நிலையம் கத்தி விமானநிலையம் உள்ளூர்

இந்த விமானங்கள்  ஐதராபாத், பெங்களூருவுக்கு  திருப்பி அனுப்பபட்டன. மலேசியா, தாய்லாந்து, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 12 விமானங்கள் நடுவானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. நள்ளிரவு 12  மணிக்கு மேல் விமானங்கள் ஒவ்வொன்றாக தரை இறங்கின. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 8 சர்வதேச விமானங்கள் உட்பட 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. சிங்கப்பூர், துபாய், பஹ்ரேன், தோஹா உட்பட பல நாடுகளுக்கு  செல்லும் சர்வதேச விமானங்கள் மற்றும்   டெல்லி, மும்பை, ஹைதரபாத், புனே, பெங்களூர் உட்பட பல மாநிலங்களுக்கு செல்லும்  உள்நாட்டு விமானங்கள் சென்னையில் இருந்து சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web